நாமக்கல், ஏப்.27
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரம் விதை பண்ணை விவசாயிகளின் வயல்களை நாமக்கல் விதைச்சான்று உதவி இயக்குநர் சித்திரைச்செல்வி மற்றும் விதைச்சான்று அலுவலர் தமிழரசு ஆகியோர் ஆய்வு செய்தனர். பிரிதி எளையாம்பாளையம் நல்லமுத்துவின் நிலக்கடலை வயலில் புதிய ரகமான கருவிதை ”கதிரி 1812” வயலை ஆய்வு செய்து புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அறுவடை பின்சார் தொழில் நுட்பங்கள் பற்றியும் கதிரி 1812 ரகத்தின் சிறப்பு இயல்புகள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள். ஆய்வின் போது திருச்செங்கோடு வட்டார உதவி விதை அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
Spread the love