October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விவசாயிகளுக்கான நுண்ணீர் பாசன பயிற்சி

விருதுநகர், அக்.11

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரம், எரிச்சநத்தம் கிராமத்தில் நுண்ணீர் பாசனம் எனும் தலைப்பில் விவசாயிகள் பயிற்சி சிவகாசி வேளாண்மை உதவி இயக்குனர் ஜா.ரவிசங்கர் தலைமையில் நடைபெற்றது.

சிவகாசி வட்டாரத்தில் விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் எரிச்சநத்தம் கிராமத்தில் நுண்ணீர் பாசனம் எனும் தலைப்பில் விவசாயிகள் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பயிற்சியில் சிவகாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ரவிசங்கர், சிவகாசி வட்டாரத்தில் பாரத பிரதமரின் நுண்ணீர் பாசனத்திட்டம் பற்றியும் சொட்டு நீர் பாசன முறைகள் பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் இத்திட்டத்தின்க கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானித்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனக்கருவிகள் விவசாயிகளின் சாகுபடி நிலத்தினில் அமைத்துத்தரப்படும் என எடுத்துரைத்தார். இப்பயிற்சியில் வேளாண்மை துணை இயக்கநர் (நுண்ணீர் பாசனம்) ஜெயலட்சுமி முன்னிலை வகித்து நுண்ணீர் பாசன முறைகள் பற்றி பயிற்சி அளித்தார். மேலும் இப்பயிற்சியில் பினோலக்ஸ் மற்றும் கேந்திர இபிசி சொட்டு நீர் பாசன நிறுவன அலுவலர்கள் சொட்டு நீர் பாசன முறையின் நன்மைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்தும் சொட்டு நீர் பாசன குழாய் அமைப்புகள் நீக்கி நீர் பாய்ச்சும் முறைகள் பற்றி எடுத்துரைத்தார். சிவகாசி வட்டார துணை வேளாண்மை அலவலர் ச.சீனிவாசன் நடப்பு ஆண்டு சிவகாசி வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் அரசு மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார்.

இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை சிவகாசி வட்டார விரிவாக்க சீரமைப்பு திட்ட அலுவலர்கள் ம.நாராயணன் மற்றும் த.மாரிமுத்து, உதவி வேளாண்மை அலவலர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Spread the love