August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தில் பயிற்சி

ஈரோடு, ஜூலை 1

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை வட்டாரத்தில் உள்ள புதூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டம் சார்பாக விவசாயிகள் மாடித்தோட்டம் குறித்த பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு அம்மாபேட்டை வேளாண்மை உதவி இயக்குநர் ம.கனிமொழி கலந்து கொண்டு வேளாண்மைத்துறை மானிய திட்டங்கள் பற்றி கூறினார். குமரகுரு வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் ஜெகதீஸ்காந்த் மாடி தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைப்பது, வாழை மற்றும் சிறிய வெங்காயம் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். மேலும் விதை சான்று அலுவலர் தமிழரசு விதை சான்று மற்றும் அங்கக சான்று துறை செயல்பாடுகள் குறித்து எடுத்து கூறினார். இப்பயிற்சியில் தோட்டக்கலை உதவி அலுவலர் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சிக்கான ஏற்பாட்டினை அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர்கள் பிரபாகரன் மற்றும் தியாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்

Spread the love