January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி

கடலூர், டிச.24

கடலூர் மாவட்டம், கம்மாபுரம் வட்டாரம் அட்மா திட்டத்தின் சார்பாக நேற்று முன்தினம் U.அகரம் கிராமத்தில் இயற்கை வேளாண்மை பயிற்சி, வேளாண்மை உதவி இயக்குனர் சுதமதி தலைமையில் நடைபெற்றது. பயிற்சியில் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் காயத்ரி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். சிறப்பு அழைப்பாளராக வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் கென்னடி ஜெபக்குமார், கலந்து கொண்டு இயற்கை முறையில் விவசாயம் செய்வதை விவசாயிகளுக்கு இரசாயன மருந்து தெளிக்காமல் மாற்றாக, தொழு உரம், மண்புழு உரம் ஊட்டமேற்றிய தொழு உரம், பஞ்சகாவியம், மீன் அமிலம், தேமூர் கரைசல், ஜீவாமிர்தம் ஆகியவைகளை பயன்படுத்தி இயற்கை முறையில் விவசாயம் செய்யுமாறு விவசாயிகளுக்கு கருத்துரை வழங்கினார். பயிற்சியினை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் தங்கதுரை, உதவி தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், செல்லமுத்து பயிற்சியை ஏற்பாடு செய்தனர். இப்பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர் பயனடைந்தனர்.

Spread the love