January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விவசாயிகளுக்கு ஊரக வேளாண் அனுபவ பயிற்சி வேளாண் கல்லூரி மாணவிகள் வழங்கல்

ஈரோடு, ஜன.10

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப் பாளையம் வட்டாரம், தூக்க நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் வாய்க்கால் ரோட்டைச் சேர்ந்த வெள்ளியங்கிரி என்ற விவசாயியின் விளைநிலத்தில், ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் குமரகுரு வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் த.பிரவீணா, பி.பிரித்தி புளோரா ராணி, அ.ஹேமலதா, க.மகாலட்சுமி, இர,ஜெயஸ்ரீ, வே.வான்மதி, செ.சுதந்திரா, கோ.கௌரி ஆகியோர் மண் மற்றும் நீர் பரிசோதனை மாதிரிகளை சேகரித்தனர். மேலும் அங்குள்ள விவசாயிகளுக்கு மண் பரிசோதனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். வெள்ளி யங்கிரி விவசாயி விளைநிலத்தில் தர்பூசணி பயிரிடவுள்ள நிலையில் அவருக்கு உதவிக்கரமாக தர்பூசணி நடவினை மேற்கொண்டனர்.

Spread the love