June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விவசாயிகளுக்கு கடன் அட்டை முகாம்

விருதுநகர், ஏப்.26

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டாரத்தில் 24.4.22 முதல் 1.5.22 வரை கிராமங்களில் நடைபெற்று கொண்டிருக்கின்ற முகாமில் விவசாயிகள் கடன் அட்டைக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. எனவே, பிரதம மந்திரி விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள், விவசாய கடன் அட்டை பெற அவர்களது புகைப்படம், ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், கணினி 10 (1) நகல், வங்கி கணக்கு புத்தக நகல், நடப்பு அடங்கல் சான்று, அலைபேசி எண் ஆகியவற்றுடன் விவசாய கடன் அட்டைக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தர கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் பிரதம மந்திரி விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு அடுத்த தவணையான ரூபாய் 2000/- பெற இ -சேவை மையங்களுக்கு சென்று தங்களது ஆதார் எண்ணையும், அலைபேசி எண்ணையும் இணைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ள இராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) கு.தனலட்சுமி கேட்டுக் கொள்கிறார்.

Spread the love