October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விவசாயிகளுக்கு சத்துமிகு தானியங்கள் குறித்த பயிற்சி

விருதுநகர், அக்.9

இராஜபாளையம் வட்டாரத்தில் இராமலிங்காபுரம் கிராமத்தில் வேளாண்மைத் துறையின் சார்பாக விவசாயிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு திட்டம்- சத்துமிகு தானியங்கள் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது
. இப்பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் வனஜா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு
சிறுதானியத்தின் முக்கியத்துவம் அதன் பயன்பாடுகள் மற்றும் சாகுபடி முறைகளைப் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.
மேலும் இக்கூட்டத்தில் இராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையா, கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் வேளாண்மை அலுவலர் தனலட்சுமி, நுண்ணூட்ட உரங்கள், உயிர் உரங்கள் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் பற்றி எடுத்துக் கூறினார்.

மேலும் தேசிய உணவு பாதுகாப்பு இயக்க தொழில்நுட்ப உதவியாளர் அர்ஜுன், செய்முறை விளக்கம் அளித்தார். இப்பயிற்சிக்கான ஏற்பாட்டை முனியப்பன் உதவி வேளாண்மை அலுவலர் செய்திருந்தார்.

Spread the love