June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்

திருவாரூர், ஏப்.9

திருவாரூர் விதைப்பரிசோதனை நிலையத்தில் தஞ்சை சரக விதைப்பரிசோதனை அலுவலர் இரா.குப்புசாமி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது, சான்று விதை மாதிரிகள், ஆய்வு விதை மாதிரிகள், பணி விதை மாதிரி விதைகள் மற்றும் அதன் தரம், முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை, பிற ரக கலப்பு ஆகியன கணக்கிடப்படும் முறைகள், விதை மாதிரி பரிசோதனை முடிவுகள் தாமதமின்றி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா, விதை முளைப்புத்திறன் அறையில் கடைப்பிடிக்கப்படும் வெப்பநிலை, ஈரப்பதரம், ஒளி அளவு மற்றும் முளைப்புத்திறன் சோதனை நாற்றுக்களின் வளர்ச்சி ஆகியவற்றை துல்லியமாக ஆய்வு செய்தார்.

மேலும் அவர் கூறுகையில், விவசாயிகள் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற தரமான விதையை அறிந்து பயிர் சாகுபடி செய்யலாம். தங்களிடமுள்ள விதைகளின் தரத்தை அறிய ரூ.80/- (ரூபாய் எண்பது மட்டும்) கட்டணத்துடன் நேரிலோ அல்லது தபால் வாயிலாகவோ மூத்த வேளாண்மை அலுவலர், விதைப்பரிசோதனை நிலையம், 15 பி, பெரியமில் தெரு, விஜயபுரம், திருவாரூர் என்ற முகவரிக்கு அனுப்பி பயனடையலாம் என்றார்.

ஆய்வின் போது திருவாரூர் விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் க.புவனேஸ்வரி, வேளாண்மை அலுவலர் சிவசக்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Spread the love