October 23, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி

சிவகங்கை, அக்.9

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் மூலம் அட்மா விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2021-22ம் ஆண்டு விவசாயிகளுக்கான உள்மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நுண்ணீர் பாசனம் என்ற தலைப்பில் சுள்ளங்குடி கிராமத்தில் கோவிட்-19 அரசுவழிகாட்டு நெறிமுறைகளின்படி பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் க.அமிர்தலட்சுமி, வரவேற்றார். இப்பயிற்சியினை மானாமதுரை, வேளாண்மை உதவி இயக்குநர் ரா.பத்மாவதி தொடங்கி வைத்து நுண்ணீர் பாசனம் மூலம் பயிருக்கு தேவையான நீரினை குறைவான வீதத்தில் நீரை அளிப்பதால் பயிர்கள் நன்கு வளர்ந்து அதிக மகசூல் பெறலாம். சொட்டு நீர் பாசனம் செய்வதால் 60 சதவீதம் வரையிலும் நீரினை சிக்கனம் செய்யலாம். நுண்ணீர் பாசனம் முறையில் சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழைத்தூவான் என்ற முறைகளில் பயிருக்க ஏற்றது போல அமைத்து கொள்ள சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

இப்பயிற்சியில் உதவி பொறியாள் வனராஜ், நுண்ணீர் பாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள், பராமரிப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். மானாமதுரை வட்டார வேளாண்மை அலுவலர் த.கிருத்திகா கூறுகையில், நுண்ணீர் பாசனம் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் ஆதார் அட்டை நகல், ரேஷன் அட்டை நகல், நில ஆவணம், நில வரைபடம், சிறு/குறு விவசாயி சான்று, வங்கி கணக்கு புத்தக நகல் பற்றியும் இதன் மூலம் பயனடையும் விவசாயிகள் கூடுதல் நீர் மேலாண்மை நடவடிக்கைகள் என்ற திட்டத்தில் பயன் பெறலாம் எனவும் எடுத்தரைத்தார். இப்பயிற்சியில் ரூட்ஸ் இரிகேஷன் கம்பெனி மூலம் கருத்து மற்றும் கண்காட்சி வைக்கப்பட்டது. இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பாலமுருகன், சதீஷ் செய்திருந்தனர். உதவி வேளாண்மை அலுவலர் தினேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Spread the love