October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன பயிற்சி

சிவகங்கை, அக்.12

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டாரத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை – விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் மூலம் நுண்ணீர் பாசனம் பற்றிய விவசாயிகள் பயிற்சி, மேலப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டார்கள். இப்பயிற்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரா.ஜோதி வரவேற்றார். இப்பயிற்சியினை சிங்கம்புணரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி தொடங்கி வைத்து நுண்ணீர் பாசன மூலம் பயிருக்கு தேவையான நீரினை குறைவான வீதத்தில் நீரை அளிப்பதால் பயிர்கள் நன்கு வளர்ந்து அதிக மகசூல் பெறலாம். சொட்டு நீர் பாசனம் செய்வதால் 60 சதவீதம் வரையிலும் நீர்னை சிக்கனம் செய்யலாம். நுண்ணீர் பாசனம் முறையில் சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழைத்தூவான் பயிருக்கு ஏற்றது போல அமைப்பதற்கு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும் பெரு விசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் வழங்கபட்டு வருகிறது என விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் பிருந்தா கலந்து கொண்டு நுண்ணீர் பாசன கருவிகளை எவ்வாறு இயக்குவது, பாசன கருவிகளில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்கும் முறைகள் மற்றும் மானிய விபரங்கள் பற்றி விரிவாக எடுத்து கூறினார். எல்.சி நுண்ணீர் பாசன கம்பெனி தங்களுடைய டீலர் மூலம் நுண்ணீர் பாசன கருவிகள் மற்றும் அதன் உதிரி பாகங்களை வைத்து அதன் இயக்கும் முறைகள், பழுது ஏற்படாமல் பாசன கருவிகள் இயக்கும் முறைகள், பழுது ஏற்பட்ட பின் அவற்றை எவ்வாறு சரி செய்தல் போன்ற விபரங்களை விரிவாக எடுத்துரைக்கப்பட்டு செயல்விளக்கம் செய்து காண்பித்தார். சிங்கம்புணரி வேளாண்மை அலுவலர் திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் பற்றி எடுத்து கூறி சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசரிகள் ஏக்கருக்கு ரூ.361.52/- வீதம் பிரீமியத் தொகை செலுத்தி 15.11.2021க்குள் பயிர் காப்பீடு செய்ய அளிவுறுத்தினார். துணை வேளாண்மை அலுவலர் வேளாண்மைத் துறையில் செயல்படுத்தி கொண்டிருக்கும் மத்திய மற்றும் மாநில திட்டங்கள் பற்றி எடுத்து கூறினார். இந்த பயிற்சியில் நெல், பயறு வகைகள், நிலக்கடலை மற்றும் தென்னை நுண்ணூட்டம் உரங்கள் இடும் தொழில்நுட்பங்கள் பற்றியும் மற்றும் பயன்கள் பற்றி செயல்விளக்கம் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த பயிற்சியின் ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் அழகுசுந்தரம் செய்திருந்தார். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கும் தொழில்நுட்ப வழங்கிய வல்லுநர்களுக்கும் உதவி வேளாண்மை அலுவலர் வேல்ராஜ் நன்றி தெரிவித்தார்.

Spread the love