October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விவசாயிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

கடலூர், அக்.8

கடலூர் மஞ்சக்குப்பம் சுப்புராயலு ரெட்டியார் திருமணமண்டபத்தில் விவசாயிகளுக்கு பட்டா மாற்றத்திற்கு நடைபெற்ற சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பயனாளிகளுக்கு பட்டாமாற்றத்திற்கான ஆணையினை வழங்கினார்.

கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும்; விவசாயிகளுக்கான பட்டா மாற்றம் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 30-ந் தேதியிலிருந்துஅக்டோபர் 07-ந் தேதிவரைதங்களதுபட்டாமாற்றம் கோரும் மனுக்களை இணையதளத்தில் விவசாயிகள் பதிவுசெய்ததன் அடிப்படையில் அம்மனுக்களைபரிசீலனைசெய்துஏற்பளிக்கப்பட்டமனுக்களுக்கு இச்சிறப்புமுகாமிகளில் பட்டாமாற்றத்திற்கானஆணைபயனாளிகளுக்குவழங்கப்படுகிறது.

இதனைத்;தொடர்ந்துகடலூர் வட்டத்தில் விவசாயிகளுக்குபட்டாமாற்றத்திற்கானசிறப்புமுகாமில் 130 பயனாளிகளுக்குபட்டாமாற்றத்திற்கானஆணைவழங்கப்பட்டது.

மேலும் அனைத்து வட்டங்களிலும் நிலுவையில் உள்ள மனுக்களில் உட்பிரிவு அல்லாத இனங்களில் 7 தினங்களுக்குள்ளும் உட்பிரிவு இனங்களில் 15 தினங்களுக்குள்ளும் ஆவணங்கள் மற்றும் விசாரணையின் அடிப்படையில் பட்டாமாற்றம் செய்து ஆணை வழங்கப்படும்.

நமது மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் நான்கு கட்டங்களாக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது இம் முகாம்களை பயன்படுத்தி தகுதி வாய்ந்த அனைவரும் விடுபடாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Spread the love