October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கல்

கடலூர், அக்.6

கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் வட்டாரம், அட்மா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விவசாயிகள் மரக்கன்றுகளை நட்டதை வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா, அனைத்து கிராமங்களிலும் நட்ட மரக்கன்றுகளை பார்வையிட்டும், மரக்கன்றுகளை நட்டும் சிறப்பித்தார். வேளாண்மை துணை அலுவலர் கோபி, உதவி வேளாண்மை அலுவலர்கள் வெங்கடேசன், புகழேந்தி, ராஜ்பாபு, சிவகுமார், முத்து சரவணன் உடன் இருந்தனர். இந்நிகழ்ச்சியை ஆத்மா திட்ட பணியாளர்கள், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஆனந்த செல்வி, உதவி தொழில்நுட்ப மேலாளர் தேவேந்திரன், சரவணன் ஏற்பாடு செய்தனர்.

Spread the love