ஈரோடு, ஏப்.23
ஈரோடு மாவட்டம், பனமரத்துப்பட்டி பகுதியில் பூமி தினத்தையொட்டி, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், இணைய வழி கருத்தரங்கு நேற்று நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர்
விஜயகுமார், பூமி வெப்ப மயமாவதற்கான காரணங்கள், அதை குறைப்பதில், மரங்களின் பங்கு குறித்து விளக்கினார். விஞ்ஞானிகள் மலர்கொடி, சுகன்யா கண்ணா, கோகிலா, விஜயன், மாலதி
ஆகியோர், மண் வள பாதுகாப்பு, சுற்றுச்சுழல் சார்ந்த பூச்சி நோய் மேலாண்மை, கால்நடை பராமரிப்பு முறை, இயற்கை வழி விதை நேர்த்தி, பிராண வாயுவை அதிகம் வெளியிடும் துளசி செடி
முக்கியத்துவம் குறித்து விளக்கினர். வானிலை பதிவாளர் பிரபாகரன், வானிலை சார்ந்த வேளாண் குறித்து விளக்கினார். இதில் திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.
Spread the love