October 23, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விவசாயிகள் அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, அக்.7

விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் இரா.ஆனந்தசெல்வி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, இயற்கை முறை வேளாண்மையில் விளைபொருள் உற்பத்தி, இயற்கை விளைபொருள் பதனிடுவோர் மற்றும் விற்பனை செய்வோருக்கு அபீடா நிறுவனத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில் அங்ககச்சான்று வழங்கப்பட்டு வருகிறது எனவும் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்த திட்டத்தின்படி, அங்ககச்சான்று பெற தனி நபராகவோ அல்லது குழுவாகவோ பதிவு செய்யலாம் எனக்கூறினார். கால்நடை பராமரிப்பு, தேனீ வளர்ப்பு, வனப்பொருள்கள் சேகரிப்பு செய்வோரும் பதிவு செய்யலாம். அங்கக முறைப்படி இயற்கை வழி வேளாண்மையில் இயற்கை உரம், தாவர பூச்சிக்கொல்லிகள் மட்டுமே உபயோகிக்க வேண்டும். இரசாயன உரம், இரசாயன பூச்சிக் கொல்லிகளை உபயோகிக்க கூடாது எனவும் கூறினார். அங்கக வேளாண்மை பண்ணை தனிமைப்பட்டு இருக்க வேண்டும். பழ வகை பயிர்கள், காய்கறி பயிர்கள், தானிய பயிர்கள், பயறு வகை பயிர்கள், பருத்தி மற்றும் எண்ணெய் வித்துப்பயிர்கள் அனைத்திற்கும் விவசாயிகள் அங்கக வேளாண் சாகுபடி முறைகளை கையாண்டு அங்கக சான்றளிப்புக்கு பதிவு செய்து பயன் பெறலாம்.

இணைக்க வேண்டிய ஆவணங்கள் : அங்ககச்சான்றளிப்பு விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்ப படிவம் 3 நகல்கள், பண்ணையின் பொது விபரக்குறிப்பு 3 நகல்கள், பண்ணையின் வரைபடம், மண் பரிசோதனை மற்றும் பாசன நீர் பரிசோதனை விபரம், ஆண்டு பயிர் திட்டம் துறையுடனான ஒப்பந்தம் 3 நகல்கள், நிலத்திற்கான சிட்டா நகல், ஆதார் அட்டை நகல், பான் அட்டை நகல் (PயுN ஊயுசுனு), பாஸ்போட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றை இணைக்க வேண்டும். பதிவு கட்டணமாக சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.2700, பிற விவசாயிகளுக்கு ரூ.3200, குழு அமைப்புகளுக்கு ரூ.7200, வணிக நிறுவனங்களுக்கு ரூ.9400ம் செலுத்த வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு புதுக்கோட்டை, காட்டுப்புதுக்குளம் ரோடு, வேளாண் இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் (தொலைபேசி எண் : 04322 227667, கைபேசி எண் : 99947 97879) அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love