January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

விருதுநகர், டிச.24

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(24.12.2021) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி.இ.ஆப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி மற்றும் முக கவசங்களை தவறாது அணிந்து ஒமிக்ரான் வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து கண்மாய் மற்றும் பிற நீர்நிலைகளிலும் மழைநீர் நிறைந்து பாசனத்திற்கு போதுமான அளவு நீர் சேகரம் செய்திட உழைத்த வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கெளரவிக்கப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 22 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வத்திராயிருப்பு வட்டாரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் விவசாயிகள் மட்டுமே நெல் விற்பனை செய்யும் வகையிலும் அனைத்து ஆவணங்களுடன் e-Portalல் முன்கூட்டியே பதிவு செய்து கொள்முதல் செய்யப்படும் விபரங்கள் விவசாயிகளுக்கு விளக்கி கூறப்பட்டது.

Spread the love