August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விவோ Y52 5ஜி ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் அறிமுகமானது

புதிய ஒய்52 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

இருப்பினும் எப்போது இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை.

புதிய ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் தெளிவு, 1080X2408 பிக்சல் துல்லியம், 20:9 என்ற திரைவிகிதம் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவைப் பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி சிப்செட் புராஸசர் உள்ளது. இது ஆண்ட்ராய்டு 11 சார்ந்த Funtouch OS 11.1 இயங்குதளத்தில் செயல்படும்.

இந்த மொபைலில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உள்ளது. அத்துடன் மெமரிகார்டு ஸ்லாட் ஒன்றும் தரப்பட்டுள்ளது.

விவோ Y52 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி bokeh லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ் என டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. மேலும் 8எம்பி செல்ஃபீ கேமரா உள்ளது.

Y52 5ஜி மாடலில் 5000 எம்ஏஎச் பேட்டரி 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இடம்பெற்றுள்ளது. கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன.

கிராஃபைட் பிளாக் மற்றும் ட்ரீம் க்ளோ நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

Spread the love