October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விஸ்டாரா, ஏர் ஆசியா , ஏர் இந்தியா நிறுவனங்கள் ஒன்றிணைக்க டாடா நிறுவனம் திட்டம்

மும்பை, அக்.11

ஏர் இந்தியா நிறுவனத்தை, டாடா சன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ள நிலையில், அடுத்த கட்டமாக, டாடாவின் 3 விமான சேவைகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து வெளிவந்துள்ள செய்தியாவது:

ஏர் இந்தியா நிறுவனம் கைக்கு வந்த பின், முதல் கட்டமாக விஸ்டாரா, ஏர் ஆசியா , ஏர் இந்தியா’ ஆகிய மூன்றையும் ஒரு குடைக்கு கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுஉள்ளது. இதற்காக, கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக, 150க்கும் மேற்பட்ட உயரதிகாரிகள் வேலை பார்த்து வந்தனர். மேலும், இந்த மூன்று நிறுவனங்களின் மொத்த உள்நாட்டு சந்தை பங்களிப்பு தற்போது 26.9 சதமாக உள்ளது. இதனால், இண்டிகோ நிறுவனத்துக்கு அடுத்தபடியாக, இரண்டாவது பெரிய நிறுவனமாக உருவெடுக்கும் என தெரிவித்துள்ளது.

மேலும், டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள், இந்த விமான சேவைக்கு பலவகைகளில் கைகொடுக்கும். டாடாவின் அனைத்து நிறுவனங்களும், ஏர் இந்தியாவுடன் எந்த வகையில் இணைந்து உதவுவது என்பது குறித்தும் டாடா குழும அதிகாரிகள் திட்டங்களை தயாரித்து கையில் ரெடியாக வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Spread the love