June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வி ஸ்டாம் 1050 அட்வென்ச்சர் பைக் சுசூகி நிறுவனம் அப்டேட் செய்தது

மும்பை, மே 5

தனது வி ஸ்டாம் 1050 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை சுசூகி நிறுவனம் அப்டேட் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: ஹயபுசா மற்றும் GSX-S1000 மாடல்களை தொடர்ந்து சுசுகி நிறுவனம் தனது வி ஸ்டாம் 1050 மோட்டார்சைக்கிளை அப்டேட் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

புதிய 2021 வி ஸ்டாம்1050XT மாடல் புது நிறங்களில் கிடைக்கிறது. அதன்படி இந்த மாடல் ஸ்டீலி கிரே மற்றும் புளூ வண்ணங்களில் கிடைக்கிறது. 2021 சுசுகி வி ஸ்டாம் 1050 மாடல் கேண்டி டேரிங் ரெட், கிளாஸ் ஸ்பார்கில் பிளாக் வண்ணங்களில் கிடைக்கிறது. புதிய 2021 சுசூகி வி ஸ்டாம் முதற்கட்டமாக சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. லண்டனில் இதன் விலை முறையே 9,999 யூரோக்கள் மற்றும் 11,599 யூரோக்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், புது மாடல்கள் யூரோ 5 புகை விதிகளுக்கு உட்பட்டு உருவாகி இருக்கின்றன. அந்த வகையில் இரு மாடல்களும் எதிர்காலத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love