June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வீடுகளின் விற்பனை விகிதம் 5 சதம் குறைவு: அனராக் ஆய்வு

புது தில்லி, ஏப்.28

கட்டி முடிக்கப்பட்ட மற்றும் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு இடையேயான விலை வித்தியாசம், 3 முதல் 5 சதம் அளவுக்கு குறைந்துள்ளதாக, சொத்து ஆலோசனை நிறுவனமான, அனராக்தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அனராக் நிறுவனம் தன்னுடைய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கட்டி முடிக்கப்பட்ட மற்றும் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் விலைகளுக்கு இடையேயான வித்தியாசம், 3 முதல் 5 சதமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த, 2017ல் இது, 9-12 சதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னையில் இந்த வித்தியாசம், 2017ல், 9 சதமாக அதிகரித்திருந்த நிலையில், தற்போது, 5 சதமாக குறைந்துவிட்டது.

அதே போல், பெங்களூரில், 12 சதமாக இருந்தது, தற்போது, 4 சதமாக குறைந்துவிட்டது. மும்பை பெருநகர பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் விலை, ஒரு சதுர அடி, ரூ.10,700 ஆகவும், கட்டப்பட்டு வரும் வீட்டின் விலை, ரூ.10,350 ஆகவும் உள்ளது.

நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திலும், இந்த விலை வித்தியாசம் குறைந்து வருகிறது. முன்பெல்லாம் கட்டப்பட்டு வரும் வீடுகளையே மக்கள் விரும்பினர். ஆனால், இன்றைக்கு நிலைமை மாறி வருகிறது. கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்கினால், உடனடியாக குடியேறி, வாடகையை தவிர்க்கலாம் என கருதுவதாக அனராக் தெரிவித்துள்ளது.

மேலும், கட்டுமான தாமதங்களில் சிக்க வேண்டியதிருக்காது என்றும் கருதுகின்றனர். அது மட்டுமல்லாமல், ஜிஎஸ்டி., கிடையாதுகட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு, ஜி.எஸ்.டி., கிடையாது என்பதும், அவர்களை ஈர்ப்பதாக இருக்கிறது. கட்டுமான நிறுவனங்களும் வீடுகளை விற்று, காசு பார்க்க நினைப்பதால், அவற்றுக்கு அதிக விலை நிர்ணயிப்பதில்லை. இவ்வாறு அனராக் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love