May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை மீண்டும் குறைத்தது எஸ்பிஐ

மும்பை, மே 3

வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை எஸ்பிஐ மீண்டும் குறைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மே மாதம் 1-ம் தேதி முதல் புதிய வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்பட இருப்பதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்திருக்கிறது.

இது குறித்து மேலும் செய்தியாவது:

ரூ.30 லட்ச வரையிலான கடன்களுக்கு 6.70 சத வட்டியை எஸ்பிஐ நிர்ணயம் செய்திருக்கிறது. ரூ.30 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரையிலான வீட்டுக்கடனுக்கு 6.95 சத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ரூ.75 லட்சத்துக்கு மேலான வீட்டுக்கடனுக்கு 7.05 சத வட்டியை எஸ்பிஐ நிர்ணயம் செய்துள்ளது.

இவற்றை தவிர பெண்களுக்கு கூடுதல் சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. பெண்கள் பெயரில் வாங்கும் வீட்டுக்கடனுக்கு 0.05 சதம் கூடுதல் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல எஸ்பிஐ வங்கியின் யோனோ செயலி மூலம் விண்ணப்பிக்கும் பட்சத்தில் 0.05 சதம் சலுகை தரப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மார்ச் மாதம் 31-ம் தேதி வரை 6.70 சத வட்டியில் வீட்டுக்கடனை வழங்கியது எஸ்பிஐ. ஆனால், ஏப்ரல் 1-ம் தேதி முதல் 0.25 சதம் அளவுக்கு வட்டியை உயர்த்தியது. ஏப்ரல் மாதத்தில் 6.95 சதமாக வட்டி இருந்தது. தற்போது மீண்டும் வட்டி குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கடன் வாங்கும் அளவை பொறுத்து வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படும் என எஸ்பிஐ அறிவித்திருக்கிறது.

வீட்டுக்கடன் பிரிவில் எஸ்பிஐ பெரிய அளவிலான சந்தையை வைத்திருக்கிறது. இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள வீட்டுக்கடனில் 34 சதவீதம் அளவுக்கு எஸ்பிஐ மூலமாகவே வழங்கப்பட்டிருக்கிறது.

Spread the love