October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை பேங்க் ஆஃப் பரோடா குறைத்தது

மும்பை, அக்.11

பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆஃப் பரோடா, வீட்டு வசதி கடனுக்கான வட்டியை 6.5 சதமாக குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேங்க் ஆஃப் பரோடா வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

வீட்டு வசதி கடனுக்கான வட்டி விகிதம் 0.25 சதம் குறைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், அப்பிரிவில் வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் 6.75 சதத்திலிருந்து தற்போது 6.50 சதமாக சரிந்துள்ளது. மேலும், இந்த வட்டி குறைப்பு 2021 அக்டோபர் 7ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. பண்டிகை காலம் வரவுள்ளதால் வாடிக்கையாளர்கள் எளிதாக வீடுகளை சொந்தமாக்கி கொள்ளும் வகையில் இந்த சிறப்பு வட்டி விகிதமானது 2021 டிசம்பர் 31 வரையில் அமலில் இருக்கும். மேலும், வீட்டுக் கடனுக்கான பரிசீலனை கட்டண தள்ளுபடியை வங்கி ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்த சலுகையும் இந்தாண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என பேங்க் ஆஃப் பரோடா தெரிவித்துள்ளது.

Spread the love