January 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வெண்டை சாகுபடியில் இயற்கை முறையில் பூச்சி கட்டுப்பாடு

விவசாயிகள் ஆர்வம்

திருப்பூர், ஏப்.24

வெண்டை சாகுபடியில் இயற்கை முறையில் பூச்சிக்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு வெண்டைக்காய் சாகுபடியும் பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், சிறந்த விளைச்சலை எடுத்தாலும், பூச்சி நோய்

தாக்குதலை தவிர்க்க முடிவதில்லை. இதனால், மகசூலும் கணிசமான அளவில் பாதிக்கப்படுகிறது. பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, இயற்கை வேளாண் முறைகளை விவசாயிகள் பின்பற்ற

ஆர்வம் காட்டுகின்றனர். அவ்வகையில், தத்துப்பூச்சி உட்பட பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேப்பக்கொட்டை சாற்றினை குறிப்பிட்ட இடைவெளியில் தெளிக்கின்றனர். மேலும், இனக்கவர்ச்சி

மற்றும் மஞ்சள் ஒட்டுப் பொறிகளையும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பூச்சிகளின் இனப்பெருக்கம் தடைபட்டு, மகசூல் இழப்பும் தவிர்க்கப்படுகிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Spread the love