வெந்தயம் மூன்று இலைகளாலான கொத்தினையும் மஞ்சளான வெண்ணிற மலர்களையும், மஞ்சள் நிற விதைகளையும் உடைய சிறு செடி. விதை, இலை மருத்துவப் பயனுடையவை. இலைகள் மலமிளக்கியாகவும் வெப்புத் தணிப்பானாகவும், விதை காமம் பெருக்குதல், திசுக்களை இருக்கச் செய்தல், குடல் வாயு அகற்றல், சிறுநீர் பெருக்குதல், வெப்பம் தணித்தல், மாதவிலக்கு தூண்டுதல், வீக்கம் கரைதல் ஆகிய மருத்துவ குணம் உடையது. இலைகளை அறிந்து தனலில் வதக்கி இளம் சூட்டில் பற்றுப்போட வீக்கம், தீப்புண்கள் ஆறும். பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்து சிறிதளவு சோம்பும் உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கரைத்துக் கொடுக்க வயிற்றுப்போக்கு தீரும். ஐந்து கிராம் வெந்தயத்தை நன்கு வேகவைத்துக் கடைந்து சிறிது தேன் கலந்து கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும். வெந்தயத்தை அரைத்து தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் தணிந்து ஆறும். வெந்தயப் பொடியை ஒரு தேக்கரண்டி காலை, மாலை நீடித்துச் சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும். வெந்தயத்துடன் சமன் சீமை அத்திப்பழத்தை சேர்த்து அரைத்து நீரில் குழைத்து தனலில் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை பழுத்து உடையும்.
வெந்தயம்
Spread the love