வெப்பாலை தோல் நோய்களை முற்றிலும் குணப்படுத்தக் கூடியது. அதாவது சொரியாசிஸ் நோயை, வெப்பாலை இலைகளை காம்பு நடுநரம்பு நீக்கி, சிறு, சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு இலை மூழ்கும் அளவுக்கு தேங்காய் எண்ணையை ஊற்றி 40 நாட்கள் சூரிய ஒளி படும்படி நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது சூரிய புடம் நாற்பது நாட்கள் கழித்துப் பார்த்தால் தேங்காய் எண்ணெய் கரும் சிவப்பு நிறத்தில் காணப்படும். அந்த எண்ணையை வடிகட்டி ஒரு குடுவையில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். இதனை தோலில் சொரியாசிஸ் உள்ள தலை மற்றும் உடல் பகுதிகளில் நன்கு தடவி சூரிய ஒளி படும்படி 30 முதல் 60 நிமிடங்கள் நின்ற பின்பு மூலிகை பொடி அல்லது மூலிகை சோப்பால் குளித்து வர வேண்டும்.
வெப்பாலை

Spread the love