August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வெயில் அதிகரிக்கும் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை மையம் தகவல்

நாமக்கல், மே 22

வரும் நாள்களில் 104 டிகிரி அளவில் வெயிலின் தாக்கம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : கடந்த வாரம் பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 100.4 மற்றும் 77 டிகிரியாக நிலவியது. மூன்று நாள்களில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பதிவாகியுள்ளது, அடுத்த மூன்று நாள்களுக்கான வானிலையைப் பொருத்தமட்டில், வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் பல இடங்களில் லேசான மழை எதிர்பார்க்கக்படுகிறது. பகல் வெப்பம் 104 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 82.4 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் தெற்கிலிருந்து மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் வீசும்.

எனவே, கோழிப் பண்ணையாளர்கள் தொடர்ந்து கோடைக் கால பராமரிப்பு முறைகளை தீவிர முறையில் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக தீவன எடுப்பு மிகவும் குறைந்துள்ளதால் முட்டை உற்பத்தியும், முட்டையின் எடையும் மிகவும் குறைந்து காணப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக குறைந்த வெப்ப அளவுகள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன. வரும் நாள்களில் கோடைக் காலத்துக்கான தீவன மேலாண்மையை கடைப்பிடிக்க வேண்டும். வெப்ப அதிர்ச்சியில் இருந்து கோழிகளைக் காப்பாற்ற காலை முதல் இரவு வரை குளிர்ந்த நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love