கரூர், மே 20
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கருப்பத்தூர், கள்ளப்பள்ளி, மகாதானபுரம், பொய்கைப்புத்தூர் ஆகிய இடங்களில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது ஊரடங்கால் வெற்றிலை மண்டிகள் செயல்படுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கோவில் விழாக்கள், திருமண நிகழ்வுகள் நடத்த கடும் கட்டுப்பாடு காரணமாக தேவையும் குறைந்துள்ளது. இந்நிலையில், கடந்த மாதம், 100 கவுளி கொண்ட மூட்டை, ரூ.4,000க்கு விற்பனையானது. தற்போது, ரூ.1,500க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
Spread the love