வெற்றிலை. தீ புண் குணமாக வெற்றிலையில் நெய் தடவி லேசாக வதக்கி புண்ணின் மீது பற்றாக போட விரைவில் குணமாகும். வெற்றிலையை லேசாக மெழுகுவத்தி நெருப்பில் வாடி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்து கசக்கி பிழிந்து சாறு எடுத்து பத்து மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி இருமல் குணமாகும். சிறுவர்களுக்கு அஜீரணத்தை போக்கி பசியை தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கசாயம் செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இதில் உள்ள பொட்டாசியம் இதய செயல்பாடுகளுக்கும் கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் உறுதிக்கும் அவசியமாகும். வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும். தலையில் தண்ணீர் கோர்த்து மூக்கில் விடாது ஒழுகும் சளிக்கு வெற்றிலை சாற்றை மூக்கில் விட குணமாகும். பாம்பு கடித்தவர்களுக்கு வெற்றிலை சாறு பருக கொடுப்பதால் விஷம் முறிந்து குணமாகும். இரண்டு வெற்றிலையுடன் 50 கிராம் ஊறவைத்த சிவப்பு அரிசி சேர்த்து உண்டால் கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். அதோடு இருமல், மூச்சு திணறல், கோழைக்கட்டு ஆகியவை தீரும்.
வெற்றிலை

Spread the love