புது தில்லி, மே 19
கடந்த ஏப்ரல் மாத்தில், இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொள்ளும் முதலீடுகள், இருமடங்கு அதிகரித்துள்ளது என, ஆர்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது:
ஏப்ரல் காலகட்டத்தில், இந்திய நிறுவனங்கள், ரூ.18,323 கோடி அளவுக்கு முதலீடு களை மேற்கொண்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே, கடந்த ஆண்டு ஏப்ரலில், ரூ.8,833 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச்சில், ரூ.14,527 கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டிருந்தது.
நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் செய்த மொத்த முதலீட்டில், கடனாக மட்டும், ரூ.12,775 கோடி வழங்கப்பட்டுள்ளது. பங்கு மூலதனமாக, ரூ.2,432 கோடி முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்திய நிறுவனங்களில், டாடா ஸ்டீல் நிறுவனம் அதிகளவிலான முதலீட்டை, ஏப்ரல் மாதத்தில் மேற்கொண்டுள்ளது.
இதையடுத்து, இன்டர்குளோப், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்டு ஹோல்டிங் நிறுவனம் ஆகியவை அதிகளவு முதலீட்டினை வெளிநாடுகளில் மேற்கொண்டு உள்ளன. பிரிட்டன், சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா ஆகிய நாடுகளில், அதிகளவிலான முதலீடுகள், இந்திய நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.