June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வெளிநாட்டிலிருந்து ஆக்சிஜன் டேங்கர்களை மத்திய அரசு இறக்குமதி செய்ய திட்டம்

புது தில்லி, ஏப்.24

கோவிட் தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க சிங்கப்பூர், யுஏஇ உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆக்சிஜன் டேங்கர்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மூடப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளைத் திறக்க ஏற்பாடு செய்யுமாறும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தை தொடர்ந்து இம் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

அனைத்து மாநிலங்களும் தங்களிடம் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளின் பட்டியலை தயார் செய்து அனுப்ப வேண்டும்; மருத்துவமனைகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பதையும் மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜனை அதிக அளவில் எடுத்துச் செல்வதற்காக, சிங்கப்பூர், யுஏஇ போன்ற வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் டேங்கர்களை இறக்குமதி செய்வது குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளுடன் உள்துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு உரிய பாதுகாப்பை அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் வழங்க வேண்டும் மத்திய உள்துறைச் செயலர் அஜய் குமார் பல்லா கேட்டுக் கொண்டார். இது குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

பல ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் ஆலைகளையும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்காக திறப்பதற்கு ஏற்பாடு செய்யலாம் என்றும், அனைத்து ஆக்சிஜன் ஆலைகளின் பட்டியலை தயார் செய்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆக்சிஜன் சிலிண்டர்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் மாநிலங்களுக்கு இடையே தடையின்றி செல்வதையும் மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அஜய் குமார் பல்லா தெரிவித்துள்ளார்.

Spread the love