January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வெளிநாட்டில் 1 லட்சம் யூனிட் விற்பனை டிவிஎஸ் எண்டார்க் 125 சாதனை

சென்னை, மே 18

வெளிநாட்டு சந்தைகளில் எண்டார்க் 125 ஸ்கூட்டரின் விற்பனையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வெற்றிக்கரமாக 1 லட்சம் என்ற மைல்கல்லை கடந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்து.

டிவிஎஸ் நிறுவனம் 2018ல் இந்தியாவின் முதல் ப்ளூடூத் இணைப்பு பெற்ற ஸ்கூட்டராக அதன் எண்டார்க் மாடலை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

என்டார்க்-ஐ டிவிஎஸ் நிறுவனம் தெற்கு மற்றும் மத்திய கிழக்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா என மொத்தம் 19 நாடுகளில் விற்பனை செய்து வருகிறது.

இது குறித்து, என டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இயக்குனர் கேஎன் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவை தவிர்த்து உலகளவில் சேவை மையங்கள் டிவிஎஸ் நிறுவனத்திற்கு 60 நாடுகளில்

உள்ளன. இந்த நிலையில் தற்போது சர்வதேச சந்தைகளில் எங்களது ஸ்மார்ட் ஸ்கூட்டரான டிவிஎஸ் எண்டார்க்125 1 லட்ச விற்பனை மைல்கல்லை அடைந்திருப்பதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைக்கிறோம்

என்றார். மேலும், ஆரம்பத்தில் இருந்தே இந்த ஸ்கூட்டர் உலகளவில் தற்போதைய தலைமுறையினரிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது” எனவும் தெரிவித்தார்.

இந்த 125சிசி டிவிஎஸ் ஸ்கூட்டரில் ஸ்ட்ரீட் மற்றும் ஸ்போர்ட் என இரு விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் டிஸ்க், ட்ரம் மற்றும் ரேஸ் எடிசன் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில்

விற்பனைக்கு கிடைக்கும் எண்டார்க் 125 ஸ்கூட்டருக்கு பெயிண்ட் தேர்வுகளும் ஏகப்பட்டவை வழங்கப்படுகின்றன. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், மேட் சிவப்பு, மெட்டாலிக் க்ரே, மெட்டாலிக்

சிவப்பு, மெட்டாலிக் நீலம் என்பவை அடங்குகின்றன. அவெஞ்சர்ஸ் தோற்றத்தை கொண்ட இதன் ரேஸ் எடிசன்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த டிவிஎஸ் ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.76,261ல் இருந்து ரூ.87.362 வரையில் உள்ளன.

Spread the love