June 20, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வெளிநாட்டு ஆக்சிஜன், தடுப்பூசிக்கு 3 மாதங்களுக்கு இறக்குமதி வரி மத்திய அரசு ரத்து

புது தில்லி, ஏப்.26

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன், அது சம்பந்தப்பட்ட உபகரணங்கள், கோவிட் தொற்று தடுப்பூசி ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரியை 3 மாதங்களுக்கு மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக

செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கோவிட் 2வது அலையின் தாக்குதலால் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருவதால், மருத்துவமனைகளில் ஆக்சிஜன், தடுப்பூசி, படுக்கை வசதிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தில்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் கிடைக்காமல் தினமும் நோயாளிகள் இறந்து வருகின்றனர்.

எனவே, மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் சீராக கிடைக்க, மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்கிடையில், ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்னையை தீர்ப்பது குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் மற்றும் அது தொடர்பான மருத்துவ உபகரணங்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோவிட் தடுப்பூசி, அதன் தயாரிப்புடன் சம்பந்தப்பட்ட மூலப்பொருட்களின் இறக்குமதி வரியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த வரி ரத்து நடைமுறை அடுத்த 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Spread the love