May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வெளிநாட்டு சந்தையிலும் ஓலா இ-ஸ்கூட்டர் விற்பனை

பெங்களூரு, மே 3

ஓலா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்த கையோடு, பல்வேறு வெளிநாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

ஓலா முதல் எலெக்ட்ரிக் கூட்டரை மாடலை வரும் ஜூலை மாதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக ஓசூரில் மிகப்பெரிய வாகன உற்பத்தி ஆலையையும் அமைத்து வருகிறது. இந்த ஆலையின் கட்டுமானப் பணிகள் மிக விரைவில் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் ஓலா நிறுவனம் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளதாவது:

முதல்கட்டமாக இந்தியாவில் வர்த்தகத்தை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். மேலும், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும் எங்களது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம் என்றார்.

நடப்பு நிதி ஆண்டிலேயே, அதாவது வரும் மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பிய நாடுகளில் வர்த்தகத்தை துவங்க திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக, மத்திய தரைக்கடலை ஒட்டி அமைந்துள்ள ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை துவங்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

மேலும், எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வது குறித்தும் சூசகமாக அவர் தெரிவித்துள்ளார். அதாவது, ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க் எனப்படும் விரைவு சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் இருசக்கர வாகனங்களுக்காக உருவாக்கப்பட உள்ளது. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் நான்கு சக்கர மின்சார வாகனங்களை களமிறக்கும்போது இந்த ஹைப்பர்சார்ஜர் நிலையங்களை விரிவாக்கம் செய்யப்படும்,” என்று தெரிவித்தார்.

Spread the love