சென்னை, ஏப்.28
வரும், 30ம் தேதி முதல் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : வடக்கு உள் கர்நாடகாவில் இருந்து, தெற்கு உள் கர்நாடகா
வழியாக, தெற்கு கேரளம் வரை வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன்
கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
வரும், 30, மே, 1ம் தேதிகளில், பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். காற்றின் வெப்பநிலை இயல்பை விட, 5 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகும் என அதில்
கூறப்பட்டுள்ளது.