வேங்கை மரம் நீண்ட நீள்வட்ட வடிவ கூட்டு இலைகளையும், தங்க நிற மலர்களையும் உடைய மரம். இலை, பட்டை, பிசின் மருத்துவ பயனாக பயன்படுகிறது. பட்டை திசுக்களை இறுகச் செய்யும், இலைகள் வீக்கம் கரைத்தல், அழுக்கு நீக்கிகள் ஆகிய குணமுடையது. பிசின் குருதிப்போக்கு அடக்கும், திசுக்களை இருக்கும், மலமிளக்கும். இலைகளை அரைத்து தணலில் வதக்கி பற்றுப்போட கட்டி, புண், தோல் நோய்கள் குணமாகும். 5 கிராம் பட்டை பொடி அல்லது 50 கிராம் பட்டையை அரை லிட்டர் நீரில் இட்டு 125 மில்லியாக காய்ச்சி வடிகட்டி 30 மில்லியாகச் நாள்தோறும் மூன்று வேளை பருகிவர வயிற்றுப்போக்கு, சீத பேதி தீரும். பிசின் ஒரு கிராம் அளவாக நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வர இருமல், வெள்ளை சீத பேதி, வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும். பிசினைப் பொடித்து புண்கள் மீது தடவ அவை ஆறும்.
வேங்கை மரம்

Spread the love