August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வேப்பம் இலை ஏற்றுமதி

என்ன வியப்பாக இருக்கிறதா? ஆம் வேம்பு சார்ந்த பொருட்கள், இலை, வேப்பங்குச்சி, வேப்பங் கொட்டை, வேப்பம்பூ, பட்டை, வேர், இவை அனைத்தும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பொருள் கூடவா ஏற்றுமதியாகிறது என்று நினைக்கும் அளவிற்கு இன்னும் பல பொருட்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க தகவலாகும். இன்றைக்கு கூட ஆமோசனில் பல்லை சுத்தம் செய்ய பிரஷ்யாக வேப்பங்குச்சி கட்டுகள் விற்பனையாவது நாம் அறிந்ததே. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் NEEM PRODUCTSக்கு உலக அளவில் அதிக முக்கியத்துவம் கிடைக்கின்றது. வேம்பு சார்ந்த பொருட்களில் இருந்து ஆயில் தயாரிக்க, சோப், அழகு சாதன பொருட்கள், பூச்சி மருந்துகள், உரங்கள் போன்ற பொருட்களை வெளிநாட்டினர் தயாரிக்கின்றனர்.
குறிப்பாக அமெரிக்கா, அரபு நாடுகள், கனடா, ஜெர்மனி, இத்தாலி இன்னும் பல நாடுகளுக்கு நம் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. வேப்ப மர பொருட்களை நாம் எந்த பொருட்களை அனுப்ப போகிறமோ, அந்த நாட்டிற்கு தகுந்தவாறு QUALITY, PROCESSING, PACKING, CERTIFICATE, APPROVAL பெற்று சரியான தகுதியான இறக்குமதியாளருக்கு அனுப்பி ஏற்றுமதியில் வெற்றியடைலாம்.

தகவல் : அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை.

Spread the love