மதுரை, மார்ச் 10
கிராமப்புற தங்கல் திட்டத்தின் கீழ் உள்ள மதுரை வேளாண்மை கல்லூரி மாணவியான ரா.நர்மதா, திடியன் கிராமத்தில் விவசாயிகளுக்கு வேம்பு விதை சாறு தயாரிப்பு மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கினார். வேம்பு விதை சாறு பயிர்களை தாக்கும் பூச்சிகளுக்கு பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. இது சாறு உண்ணும் பூச்சிகளான இலைப்பேன், இலைத்தத்துப்பூச்சி, வெள்ளை ஈ,பழ ஈக்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சி, அந்துப்பூச்சியின் இளம் புழுக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது.
Spread the love