இராமநாதபுரம், மார்ச் 16
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வேளாண்மை அலுவலகத்தில் கிள்ளிக்குளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர்கள் சபரிநாதன், கோமதி மற்றும் இராமநாதபுரம் வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் ராகவன், முன்னிலையில் வேர் உட்பூசன தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. இதில் பரமக்குடி வட்டார விவசாயிகள் மற்றும் நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் மாதவ கணேஷ், ராகுல் செல்லம், விஸ்லி ஜெய்சன், பிரித்திவிராஜ், ஆகாஷ் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Spread the love