January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் பொது நிவாரண நிதிக்கு ரூ.1.25 கோடி நன்கொடை

வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில், தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம், இயக்குநர்கள் எம்.வி.ஸ்ரீராம் மற்றும் எம்.வி.விவேக் ஆனந்த் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அவரிடம் ரூ.1 கோடியே 25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

கொரோனா பெருந்தொற்றை எதிர்த்துப் போராடும் இந்த நேரத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நன்கொடை வழங்குமாறு ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள், தனிநபர்கள் நன்கொடை வழங்கிவருகின்றனர். இந்த வரிசையில் வேலம்மாள் கல்வி அறக்கட்டளையும் முன்னுதாரண நடவடிக்கையாக ரூ.1.25 கோடி நன்கொடை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love