வேலிப்பருத்தி மற்றும் உத்தாமணி என்றும் அழைப்பார்கள். இதய வடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிற பூங்கொத்துக்களையும் மென்மையான முட்களை கொண்ட காய்களை உடைய பாலுள்ள பிசுபிசுப்பான ஏறுகொடி. இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. வாந்தி உண்டாகுதல், கோழையகற்றுதல், முறை நோய் நீக்குதல், இசிவு போக்குதல் ஆகிய குணமுடையது. இலையை வதக்கி துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கக் கீல் வாதம், முடக்கு வாதம், வாதக் கடைச்சல், இடுப்புவலி முதலியன குணமாகும். சாற்றுடன் சுக்கு, பெருங்காயம் பொடித்து காய்ச்சி இளம் சூட்டில் பற்றுப் போட வாதவலி வீக்கம் குணமாகும். யானைக்கால் நோய் தொடக்க நிலையில் இருந்தால் 40 முதல் 50 நாட்களில் குணமாகும். வேரை உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 சிட்டிகை வரை பாலில் கொடுக்க குழந்தைகளின் வாயுத் தொல்லைகள் நீங்கிப் பேதியாகும். பூச்சி கிருமிகள் சாகும் 5 கிராம் வேரை பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை மட்டும் 3 நாள் கொடுக்க நஞ்சுக் கடி, கரப்பான் கிரந்தி, சூலை, பிடிப்பு வாயு முதலியவை குணமாகும்.
வேலிப்பருத்தி

Spread the love