October 23, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வேளாண்மைக் கல்லூரி தேசிய மாணவர்படை மாணவர்களுக்கு ஆளுமைத்திறன் மேம்பாடு, விழிப்புணர்வு பயிற்சி

மதுரை, அக்.8

மதுரை, வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய தேசிய மாணவர் படை மாணவ, மாணவியர் 8 பேர், 6 நாட்கள் நடக்கும் இணைய வழி ஆளுமைத்திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி பெற்று வருகின்றனர். இப்பயிற்சி முகாம் 4.10.2021 முதல் 9.10.2021 வரை நடைபெறுகிறது. பயிற்சியில் தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேஷ் மாநில மாணவர்களுக்கு ஒன்றாக ஆளுமைத்திறன் மேம்பாடு மற்றும் நேர்காணல் ஆகிய பிரிவுகளில், நிபுணர்களின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி EBSB Phase – XI 250 என் தலைப்பில் நடைபெற்று வருகிறது. வேளாண்மைக் கல்லூரி சார்பில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களை கல்லூரி முதல்வர் டாக்டர் V.K.பால்பாண்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு, தேசிய மாணவர் படைப்பிரிவில் மாணவர்கள் அதிகளவில் சேரவேண்டும். நாட்டுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்ற வேண்டும் என சுட்டிக்காட்டினார். அவ்வமயம் தேசிய மாணவர் படை பிரிவு D12 Company பொறுப்பாளர் டாக்டர் K.செந்தில் குப்புசாமி உடனிருந்தார்.

Spread the love