சேலம், மே 12
சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் மா, தென்னை, கரும்பு, வாழை, பயிறு வகைப்பயிர்கள், எண்ணைய் வித்துப்பயிர்கள் மற்றும் காய்கறிப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. பயிர்களுக்கு பேரூட்டம் தரும் வகையில் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அளிக்கப்படுகின்றன. பேரூட்டங்கள் மட்டும் பயிர்களுக்கு போதுமானதல்ல, நுண்ணூட்டச் சத்துக்களும் தேவைப்படுகின்றன. எனவே வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர்கள் பயிர் மகசூலை அதிகரிப்பதுடன் வறட்சியை தாங்கும் தன்மை, தரமான ஓரே சீரான வளர்ச்சி மற்றும் பூக்கள் உதிர்வதை தடுப்பது போன்ற செயல்களை செய்கின்றன. விவசாயிமக்களுக்கு எளிதில் கிடைப்பதற்காக
- காய்கறி ஸ்பெஷல் (காய்கறி),
- மா ஸபெஷல் (மா),
- வாழை பூஸ்டர் (வாழை),
- கரும்பு பூஸ்டர் (கரும்பு),
- பயிறு ஒண்டர் (பயிறு வகைப் பயிர்கள்),
- நிலக்கடலை ரிச் (நிலக்கடலை),
- பருத்தி ஸ்பெஷல் (பருத்தி),
- மக்காச்சோள மேச்சிம் (மக்காச்சோளம்),
- தென்னைடானிக்,
- நெல், பயறு வகை மற்றும் காய்கறி விதைகள்,
- மரக்கன்றுகள் மற்றும் பழக்கன்றுகள் மற்றும் அலங்கார செடிகள்,
போன்றவை வேளாண்மை அறிவியல் நிலையம் சந்தியூரில் விறபனைக்கு உள்ளன. தேவைப்படும் விவசாயிகள் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூரில் விளைபொருட்களுக்கான மதிப்பு கூட்டுதல் மையம் சேலம் மாவட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது. - சிறு தானிய மதிப்பு கூட்டும் மையத்தில் தினை, சாமை வரகு மற்றும் பனிவரகு. இதில் தானியங்களில் உமி, நீக்குதல் கல் மற்றும் குருணை நீக்கும் மற்றும் மாவு அரைத்தல் இயந்திரங்கள் உள்ளன.
- சூரிய உலர்த்தி (தேங்காய், மஞ்சள், வாழைப்பழம், கீரைகள் இன்னும் பிற),
- மரச்செக்கு, எண்ணைய் ஆட்டும் இயந்திரம் (எள் நிலக்கடலைதேங்காய்),
- பருப்பு உடைக்கும் இயந்திரம்
- மாவு அரைக்கும் இயந்திரம்
ஆகியவை விவசாயிகளின் பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகள் தங்கள் பொருட்களை மதிப்பு கூட்டுவதுடன் சந்தை வாய்ப்புகள் பற்றிய வழிகாட்டுதலும் பெற்று பயனடையலாம். இவ்வரிய வாய்ப்பை விவசாயிகள் பெற்று தங்கள் பண்ணை வருவாயை பெருக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Spread the love