June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வேளாண்மை கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் உலக சைக்கிள் தின ஊர்வலம்

மதுரை, ஜூன் 4

ஜூன் 3 உலக சைக்கிள் தினத்தினை ஒட்டி, வேளாண்மை கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் உலக சைக்கிள் தின ஊர்வலம் நடத்தினர்.

சைக்கிள் ஓட்டுவது உடல்நலன் காப்பதோடு மனநலம் பேணவும் உதவுகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதகமில்லாத ஒரு போக்குவரத்தாக சைக்கிள் விளங்குகிறது. ஆரோக்கியமான மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத உடற்பயிற்சி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்புடையதாகிறது. பல அளவுகளில் சைக்கிள்கள் கிடைப்பதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயிற்சி செய்யலாம். இந்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய தேசிய மாணவர் படை மாணவர்கள், கல்லூரி வளாகத்தினை சைக்கிளில் வலம் வந்தனர். யானை மலை அடிவாரத்திலுள்ள சிறிய காடு, பழத்தோட்டம், வயல்கள், வளாகத்தின் சாலையோரங்களில் பராமரிக்கப்படும் மரங்கள் மற்றும் அழகுச் செடிகள், சிட்டங்குளம் ஏரி போன்றவற்றை கடந்து வரும்பொழுது புத்துணர்வு பெற்றதாக மாணவர்கள் தெரிவித்தனர். இதில் பங்குபெற்ற மாணவர்களை வேளாண் கல்லூரி முதல்வர் Dr P.P. மகேந்திரன், வெகுவாகப் பாராட்டினார்.

Spread the love