May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வேளாண் அறிவியல் மைய செயல்பாடுகளை அறிந்த வேளாண் கல்லூரி மாணவிகள்

தேனி, மார்ச் 12

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும், தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நான்காம் ஆண்டு மாணவிகள் (ரா.தாரணி, த.திவ்யா, சோ.டோயல், ர.துர்காதேவி, கோ.இமயமதி, சே.பாமிதா, ஜெ.சு.காயத்திரி, ரா.கௌசிகா) கிராம தங்கல் திட்டத்தின் கீழ் CENDECT வேளாண் அறிவியல் மையத்தை பார்வையிட சென்றனர். இதில் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் உழவியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் பொ.மகேஷ்வரன், உழவியல் துறை பற்றியும் கேவிகே அமைப்புகளையும் பற்றி விரிவாக விளக்கமளித்தார்.
மண்ணியல் துறை
சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்
எம்.அருண்ராஜ், மண் பரிசோதனையின் முக்கியத்துவத்தை பற்றி விளக்கினார். மேலும், புதிய தொழில்நுட்பக் கருவியான ம்ருத
பரிக்ஷாக் (MRIDAPARIKSHAK) பற்றி விளக்கினார். இக்கருவியானது மண்ணின் அனைத்து பண்புகளையும் கண்டறியப் பயன் படுகிறது என விளக்கினார். தோட்டக்கலை துறை தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் கோ.ராஜாராமன், புதிய தொழில்நுட்பமான ஃப்ரூடி ஃபிரஷ், பழங்களின் வாழ்நாளை அதிகப்படுத்துகிறது எனவும் மேலும், பல தொழில்நுட்பங்களையும் விளக்கினார்.

வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர் சி.சபரிநாதன், புதிய தொழில்நுட்பங்களை எவ்வாறு விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பது என விளக்கமளித்தார். மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் ம.ரம்யா சிவசெல்வி, செங்குத்து தோட்டம் மாதிரி, மதிப்புக் கூட்டலுக்கு உதவும் சோலார் டிரையர் பற்றியும், மாடித்தோட்டம் பற்றியும், ஆற்றல் மேம்படுத்தப்பட்ட விறகு அடுப்பு முக்கியத்துவம், புளியங்கொட்டை நீக்கும் இயந்திரத்தின் முக்கியத்துவம் பற்றியும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான மூலிகை தேநீர், போமேஸ் (PO MACE), உலர் திராட்சை மற்றும் உலர் காளான் பற்றியும் விரிவாக விளக்கமளித்தார். பயிற்சியில் மாணவிகள் கேவிகே அமைப்பு களையும், புதிய தொழில்நுட்பங்களையும் அறிந்து கொண்டனர்.

Spread the love