மத்திய அரசின் வேளாண் உட்கட்டமைப்பு (AIF) நிதியில் 3 சத வட்டி மானியத்துடன் 2 கோடி வரை கடனுடன் கடன் உத்திரவாதமும் மத்திய அரசு வழங்குகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் தனியாகவோ, குழுக்களாகவோ இணந்து கடன் பெறலாம்.
இந்த கடன் நிதி பெற தகுதியான வேளாண் தொழில்கள் :
வேளாண் இயந்திர வாடகை மையம், இயற்கை இடுபொருள் உற்பத்தி மையம், நுண்ணூட்ட உரம் தயாரிப்பு, நுண்ணுயிர் உற்பத்தி மையம், நவீன துல்லிய பண்ணையத்திற்கான உட்கட்டமைப்புகள், ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உருவாக்க வசதிகள் போன்ற இதர வசதிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது.
யார் யார் கடன் பெற தகுதி :
விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் கம்பெனிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், விவசாய மகளிர் குழுக்கள் போன்ற அமைப்பினர்.
தமிழ்நாட்டில் மட்டும் கடந்த ஆண்டு முதல் 2025–26ஆம் ஆண்டு வரை 5.990 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க தகவலாகும். இதுவரை 296 பயனாளிகள் இந்த திட்டத்தில் கடனுதவி பெற்றுள்ளனர் என்பது கூடுதலான தகவல். நீங்களும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, வேளாண் வளர்ச்சியில் உட்கட்டமைப்பை உருவாக்கி வாழ்வில் ஏற்றம் பெற்றிட முயற்சிப்போம்.
கூடுதல் விபரங்களுக்கு https//agri. infra .dec .gov.in.இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளவும்