மதுரை, ஏப்.2
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் விநாயகபுரம் கிராமத்தில் தங்கியிருக்கும் மதுரை வேளாண் கல்லூரி மானவர்கள் ரேவந்த்குமார், சபிஅகமது, சாகித்யன், அனுதிப் யாதவ், சமந்த், சரத்ராஜ் ஊரக வேளாண் பணிஅனுபவ திட்டத்தின் ஒரு பகுதியாக தொழில் துறை இணைப்பு திட்டத்தின் கீழ் சாந்திகிராம் டெய்ரி புரமோஷன், நத்தம் சென்று பார்வையிட்டனர். அந்த தொழிற்சாலையின் துணை மேலாளர் சிவராமன் அங்கு நடக்கும் செயல்களை விளக்கி மற்றும் நேரில் பார்வையிட்டு அறிந்து கொள்ளும் வாய்ப்பினை வழங்கினர். பால் கொள்முதல் மற்றும் பால் வரவேற்பு, பாலின் தர சோதனை மதிப்பீடு, பால் செயல்முறை, பேக்கிங், பாலின் விலை நிலவரம் மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றிய விவரங்களை அழகிய முறையில் எடுத்து உரைத்தார். மொத்தம் ஐந்து நாட்கள் பயிற்சிப் பெற்று அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டார்கள்.
Spread the love