தமிழக அரசு தாக்கல் செய்த இரண்டாவது வேளாண் பட்ஜெட்ல சிறு தானியங்களின் முக்கியத்துவம் பற்றிய நிறைய தகவல் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
வரும் 2023ம் ஆண்டை” சர்வதேச சிறு தானிய ஆண்டாக” ஜ.நா அறிவித்துள்ளது. இதன் சிறப்பிற்கு முக்கித்துவம் கொடுக்கும் வகையில், சிறு தானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு, இரண்டு சிறப்பு சிறுதானிய மண்டலங்கள் அமைக்கும் அறிவிப்பு வெளியானது விருதுநகர், தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் ஒரு மண்டலமாகவும், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி உள்ளிட்ட வட மாவட்டங்கள் அடங்கிய ஒரு மண்டலமாக உருவாக்கப்படும். சிறுதானியங்களின் ஊட்டச்சத்துகளின் சிறப்பை மாநில, மாவட்ட அளவிலான சிறுதானிய திரு விழா சிறப்பாக நடத்தப்படும். சாகுபடி முதல் மதிப்புகூட்டி விற்பது வரை அனைத்து உதவிகளையும் ஒரு சேர வழங்கிடும் வகையில் வரும் நிதியாண்டில் 92 கோடி ருபாய் ஒதுக்கப்படும். மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சிறுதானிய சாகுபடி, சிறுதானிய உணவு ஆகியவற்றை மகளிர் சுய உதவிக்குழு ஊக்குவிக்கும் பொருட்டு 500 சிறு விவசாயிகளுக்கு 1 கோடி ருபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறுதானியங்கள் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படும். இன்றைய தலைமுறையினர் மறந்து போன சிறு தானியங்களான கம்பு, சோளம், குதிரைவாலி, வரகு, தினை போன்றவற்றை இன்றைய தலைமை முறைக்கு நினைவுபடுத்திட சிறுதானிய சாகுபடி சிறப்பாக செய்து வாழ முயற்சிப்போம்.
வேளாண் பட்ஜெட்ல சிறு தானியங்களின் முக்கியத்துவம்
Spread the love