June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வேளாண் மாணவிகள் நீடித்த நிலையான சாகுபடிமுறை (எஸ்.எஸ்.ஐ) பற்றி செயல்விளக்கம்

திருச்சி, ஏப்.5

கரும்பு சாகுபடியில் குறைந்த நீர் பாசனத்தில் இரு மடங்கு வருவாய் பெற நீடித்த நிலையான சாகுபடி முறை (எஸ்.எஸ்.ஐ) பற்றிய விழிப்புணர்வையும் கரணைகளை எவ்வாறு உற்பத்தி செய்வது பற்றிய செயல்விளக்கத்தையும் அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவிகள் விவசாயிகளுக்கு செய்து காட்டினர்.

இயல்பான கரும்பு சாகுபடி முறையில், 7 முதல் 9 மாத வயதுடைய 3 பருவ விதைக் கரணை களை ஹெக்டேருக்கு 16 ஆயிரம் எண்ணிக்கை என்ற அளவில் விவசாயிகள் பயன்படுத்துவர்.
பாருக்கு பார் இரண்டரை முதல் 3 அடி இடைவெளி விட்டு விதைக் கரணைகளை நடுவர். வாய்க்கால் மூலம் நீர் பாய்ச்சப்படும். பாய்ச்சலும், காய்ச்சலும் ஏற்படுவதால் பயிரின் வளர்ச்சி குறைகிறது. களை பிரச்சனையும் ஏற்படுகிறது அதிகம். இயல்பான முறை சாகுபடியில் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்த முடியாது. இயல்பான முறையில் முதல் வருடம் மட்டுமே ஊடுபயிர்கள் சாகுபடி செய்ய முடியும். ஏக்கருக்கு 40 முதல் 50 டன் வரை மட்டுமே கிடைக்கும். ஆட்கள் கூலி உயர்வு, உரச் செலவு மற்றும் இதர செலவினங்கள் என ரூ.60 முதல் 65 ஆயிரம் வரை செலவாகும். இதனால் ஏக்கருக்கு நிகர லாபம் ரூ.30 முதல் 40 ஆயிரம் வரையே கிடைக்கிறது.

நீடித்த-நிலையான கரும்பு சாகுபடி : ஆனால், நீடித்த-நிலையான கரும்பு சாகுபடியை பொருத்தவரை விதைக் கரணைகளுக்குப் பதில் தரமான விதைக்கரும்பில் இருந்து ஒரு பருவ கரணைகள் எடுக்கப்பட்டு குழித்தட்டுகளில் நடப்பட்டு நிழல் வலைக் கூடாரங்களில் வளர்க்கப்படுகின்றன. 25 முதல் 35 நாள் வயதுடைய தரமான நாற்றுகள் நன்கு உழுது தயார் செய்யப்பட்ட நிலத்தில் பாருக்கு பார் 5 அடி மற்றும் செடிக்குச் செடி 2 அடி இடைவெளியில் நடப்படுகிறது.

குறைந்த நீர்ப் பாசனம் :

அடி உரமாக ஏக்கருக்கு ஜிப்சம் 200 முதல் 300 கிலோ சூப்பர் பாஸ்பேட் 250 கிலோ மற்றும் சிங்க் பாஸ்பேட் 15 கிலோ இட வேண்டும். நீர்ப்பாசனத்தை பொறுத்த வரை சொட்டு நீர்ப்பாசனம் மூலம் நாள் ஒன்றுக்கு மண்ணின் தன்மையைப் பொறுத்து 3 முதல் 4 மணி நேரம் பாய்ச்சினால் போதுமானது. வருடம் முழுவதும் சீரான பாசனம் கிடைப்பதால் ஏக்கருக்கு 70 முதல் 80 மெட்ரிக் டன் மகசூல் கிடைப்பதோடு ஊடுபயிரிலும் கூடுதல் வருவாயாக, ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை கிடைக்கிறது.

Spread the love