திருப்பூர், மார்ச் 12
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் குன்றத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளி வளாகத்தில்,
வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பாக வேளாண் அறிவியல் நிலையம், பொங்கலூர் விஞ்ஞானிகள், பெண் விவசாயிகளின் திறன் மற்றும் அறிவை மேம்படுத்தும் வகையிலும், மாணவிகளை ஊக்குவிக்கும் வகையிலும், ஊட்டச்சத்து தோட்டத் திட்டத்தை பற்றி எடுத்துரைத்தனர். அதற்குறிய பொருட்களையும் மாணவிகளுக்கு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அருள், மேனாள் தலைமை ஆசிரியர் ராஜ் வெற்றிவேலன், நாட்டுதுரை உட்பட 100 மாணவிகளும் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜலிங்கம் உடன் (வேளாண் விரிவாக்க துறை) விஞ்ஞானி முனைவர் திலகம், முனைவர் கவிதாஸ்ரீ (உணவு அறிவியல் மற்றும் ஊட்டச் சத்துயியல்) இந்நிகழ்வை ஒருங்கிணைத்து, இவர்களுடன் இணைந்து தோட்டக்கலை துறை மாணவிகளும் பங்கேற்றனர்.
Spread the love