August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தேனி, ஜூலை 5

தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பெரியாறு மற்றும வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 127.60 அடியாக உள்ளது. நீர்வரத்து 1414 கனஅடி, நீர்திறப்பு 1655 கனஅடி.

வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்துகொண்டே வந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் உயர தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் 939 கனஅடியாக இருந்த நீர்வரத்து காலை 1510 கனஅடியாக அதிகரித்துள்ளது. 53 அடிக்கு கீழ் குறைந்த அணையின் நீர்மட்டம் தற்போது 53.35 அடியாக உள்ளது. பாசனத்திற்காகவும், மதுரை மாவட்ட குடிநீருக்காகவும் 869 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடியாகவும், சோத்துப்பாறை நீர்மட்டம் 80.36 அடியாகவும் உள்ளது.

Spread the love