தேனி, மே 18
பெரியாறு, வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் குன்னுார் வைகை ஆறு வழியாக வைகை அணைக்கு செல்லும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டம், வைகை அணைக்கு பெரியாறு, தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறுகள் மூலம் நீர் வரத்து கிடைக்கும். டவ் டே புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பரவலான மழை பெய்துள்ளது. பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 900 கன அடி வீதம் நீர் வெளியேறுகிறது. போடி கொட்டக்குடி ஆறு, தேனி முல்லை ஆறுகள் மூலமும் தண்ணீர் வரத்துள்ளது. இதனால் குன்னூர் வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. எனவே, செவ்வாய்கிழமை 71 அடி மொத்த உயரம் கொண்ட வைகை அணையில், நீர் மட்டம் 63.45 அடியாக இருந்தது.
அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1050 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 72 கன அடி வீதம் வெளியேறுகிறது.